Wednesday, 30 November 2022

காஞ்சி டிஜிட்டல் டீம் இணைய வழியாக நடத்திய குழந்தைகள் தின கொண்டாட்ட நிகழ்வு 13 தலைப்புகளில் நடத்தப்பட்ட போட்டியில் 20 மாணவர்கள் கலந்து கொண்டனர் அதில் 5மற்றும் 6 வகுப்பு பிரிவு தனி நடிப்பு நிகழ்வில் இரா.திவ்யதர்ஷன். 3மற்றும் 4 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கதை சொல்லுதல் போட்டியில் மா.சஞ்சித் இரண்டு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு 26.11.2022 சனிக்கிழமை சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரியில் விண்வெளி விஞ்ஞானி திரு. மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் நடந்த விழாவில் எம் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், பதக்கம் மற்றும் நினைவு பரிசு வழங்கிய நிகழ்வுகள். மேலும் பள்ளியில் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்திய நிகழ்வுகள்.எங்கள் கிராமபுற மாணவர்களின் தனித் திறமைகளை இணைய வழி மூலம் அறிந்து அவர்களை ஊக்குவித்து பெருமைப்படுத்திய காஞ்சி டிஜிட்டல் டீம் தலைவர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் எங்கள் பள்ளியின் சார்பாக மனம் நிறைந்த நன்றியை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.












 

28.11.2022 அன்று நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் ஒன்றியம், கருப்பம்புலம் அகரம் மெட்ரிக் பள்ளியில் நடந்த மாநில சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற மாணவ செல்வங்களுக்கு பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர், பெற்றோர் ஆசிரியர் தலைவர், மற்றும் பெற்றோர்களால் வெற்றி பெற்ற மாணவ செல்வங்களுக்கு வாழ்த்துக் களையும், பாராட்டுகளையும் தெரிவித்த நிகழ்வுகள். மாணவர்களின் வெற்றிக்கு சிறப்பாக பயிற்சி அளித்த சதுரங்க மாஸ்டர் திரு. தட்சணாமூர்த்தி அவர்களுக்கும் பள்ளியின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.