Monday, 24 September 2018

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 11 ஒன்றியங்கள் உள்ளன.  ஒவ்வொரு ஒன்றியத்திலிருந்து 6 பள்ளிகள் வீதம்  66 பள்ளிகள்  கலந்துகொண்டன . அதில் எங்கள் பள்ளி  மாணவர்கள் மாவட்ட அளவில்  இரண்டாம்  இடம் பெற்றதற்கு  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம்    பாராட்டையும்  சான்றிதழையும்  பெற்ற நிகழ்வுகள்...







எங்கள் பள்ளி இரண்டாம் வகுப்பு மாணவன் சு. கமலேஷ் ஆங்கில வாசிப்பு...


Friday, 21 September 2018

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 11 ஒன்றியங்கள் உள்ளன.  ஒவ்வொரு ஒன்றியத்திலிருந்து 6 பள்ளிகள் வீதம்  66 பள்ளிகள்  கலந்துகொண்டன . அதில் எங்கள் பள்ளி  மாணவர்கள் மாவட்ட அளவில்  இரண்டாம்  இடம் பெற்ற காணொளி.. ( எங்கள் பள்ளியை பிளாஸ்டிக்  பயன்பாடு  இல்லாத பள்ளியாக மாற்றி  பொதுமக்களிடம்  விழிப்புணர்வை ஏற்படுத்திய காணொளி) 

                                                                                 தலைப்பு 
                           மாற்றத்தை நோக்கி மாணவர்கள் மாற்றி அமைத்த பள்ளி .



Friday, 14 September 2018

எங்கள் பள்ளி ஆசிரியர் க. சுப்பிரமணியன் அவர்களுக்கு 324 A2 அரிமா மாவட்டத்துடன் இணைந்து பட்டுக்கோட்டை சில்க் சிட்டி அரிமா சங்கம் சார்பில் 08.09.2018 அன்று கல்வி பாரதி விருது வழங்கிய நிகழ்வு. இந்த விருதுக்கு பரிந்துரை செய்த வேதாரண்யம் லயன்ஸ் சங்க பொறுப்பாளர்களுக்கும் .விருது வழங்கிய மாவட்ட ஆளுநர் மாவட்ட தலைவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பாளர்களுக்கும் தொடக்கக் கல்வித்துறை சார்பிலும் எங்கள் பள்ளி சார்பிலும் மானமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்..நன்றி ! நன்றி!! நன்றி!!!

Monday, 10 September 2018

தமிழகக் கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் சார்பாக எங்கள் பள்ளி ஆசிரியர் க.சுப்பிரமணியன் அவர்களுக்கு 05.09.2018 அன்று ஆசிரியர் தினத்தில் சென்னை டாக்டர் இராதாகிருஷ்ணன் இல்லத்தில் ஆசிரியர் செம்மல் விருது. வழங்கப்பட்ட நிகழ்வு. விருது வழங்கிய தமிழகக் கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவன பொறுப்பாளர்களுக்கு எங்கள் பள்ளியின் சார்பில் மனம் நிறைந்த நன்றி! நன்றி!! நன்றி!!!