Sunday, 26 January 2020

26.01.2020 எங்கள் பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழா தொகுப்பு நிகழ்வுகள்இன்று 26.01.2020 எங்கள் பள்ளியில் 71 வது குடியரசு தினவிழா, கணினி வழி திறன் வகுப்பு(SMART CLASS) திறப்பு விழா, கணினி வழி திறன் வகுப்பு அமைத்துக்கொடுத்த நல்உள்ளங்களுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா இனிதே நடைபெற்றது. எங்கள் வட்டார கல்வி அலுவலர் திரு.மு.தாமோதரன் எம்.ஏ.பிஎட். அவர்கள் தேசியக்கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார். எங்கள் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சேர்ந்து smart class room(கணினி வழி திறன் வகுப்பு)வசதி செய்து கொடுத்துள்ளனர் அதனை மாவட்ட ஊராட்சி உறுப்பினர் வழக்கறிஞர் தகட்டூர். திரு.வை.சுப்பையன்.BA.BL அவர்கள் திறப்புவிழா செய்தும்,மேலும் ரூ.2000 புரவலர் நிதியளித்தார்.ஒன்றியபெருந்தலைவர் திருமதி.கமலா அன்பழகன் அவர்கள் கலந்துகொண்டு ரூ.5000 புரவலர் நிதியளித்தார். R.V.மோகன் அவர்கள் இரும்பு பாதுகாப்பு பெட்டகம் (பீரோ) வழங்கியும்,நெல்லி மரக்கன்று வழங்கியும் சிறப்பித்தார்.ஊராட்சி மன்ற தலைவி ரேவதி பாலகுரு குத்துவிளக்கேற்றி வைத்தார்.ஒன்றியக்குழு உறுப்பினர் செல்லமுத்து எழிலரசன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் து.ரவீந்திரன் ஆகியோர் கணினி வழி வகுப்பினை துவங்கி வைத்தனர். மருதூர் ரோட்டரி சங்க தலைவர் வை. இலக்குவன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.காவல் உதவி ஆய்வாளர் தினகரன் மற்றும்ஊ.மது.தலைவர் வினோத், ஊ.ம.உறுப்பினர் நாகலெட்சுமி வைத்திலிங்கம், அத்தியாயம் அறக்கட்டைளை நண்பர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் மற்றும் கல்வியாளர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர் மேலும், பொதுமக்கள் சிறப்பு விருந்தினர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.விழா நிகழ்ச்சிகளை வை. பார்த்தசாரதி ஆசிரியர் தொகுத்து வழங்கினார். எங்கள் பள்ளியில் 2020-21 கல்வியாண்டில் முதல் வகுப்பில் சேர உள்ள அ.பவினின் தந்தை மருதூர் தெற்கு திரு.ப.அருண் அவர்கள் அனைவருக்கும் இனிப்பு மற்றும் டீ வழங்கி சிறப்பித்தார். விழாவில் அனைவரும் அமர்வதற்கு நாற்காலிகள் மற்றும் தரை விரிப்புககளை எங்கள் பள்ளியின் சத்துணவு அமைப்பாளர் திரு..இராமமூர்த்தி அவர்கள் செய்து கொடுத்து விழா சிறப்பாக அமைந்தது. ஊர்மக்கள் அனைவரும் தங்கள் வீட்டு நிகழ்வுபோல் பணியாற்றியதால் தான் நம்பள்ளியின் நிகழ்வு பலராலும் பாராட்டப்பட்டது. கணினி வழி திறன் வகுப்பு அமைத்துக்கொடுத்த நல்உள்ளங்கள்.. தகட்டூர்- இராமகோவிந்தன்காடு 1.திரு. க.புர்ணசந்திரன் - மடிக்கணினி - 1 2. திரு. இரா. இளவரசன் - ரூ10000 2. திரு. மு. இராஜகுமார் - ரூ20000 3. திரு சு. செல்வம் - ரூ10000 4. திரு து.இரவீந்திரன் - ரூ10000 எங்கள் பள்ளியின் வளர்ச்சியில் பங்குகொண்ட அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்..















































































































No comments:

Post a Comment