ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இராமகோவிந்தன்காடு - தகட்டூர் வேதாரண்யம் தாலுக்கா நாகப்பட்டினம் மாவட்டம் அ.கு.எண். 614714. செல் 9965235261
Thursday, 14 November 2019
இன்று 14.11.2019 எங்கள் பள்ளிக்குழந்தைகளை மகிழ்வித்த குழந்தைகள் தினவிழா தொகுப்புகள். 01. பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள ஆகாச மாரியம்மன் ஆலயத்தில் மாணவர்களுக்கு பெற்றோர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், ஆசிரிய பயிற்றுநர்கள், அத்தியாயம் அறக்கட்டளை உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் முன்னிலையில் சிறப்பு வழிபாடு. 02. மாணவர்களுக்கு பெற்றோர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், ஆசிரிய பயிற்றுநர்கள், அத்தியாயம் அறக்கட்டளை உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் குழந்தைகள் தினவிழா வாழ்த்துகள் கூறி ஆசி வழங்கிய நிகழ்வுகள். 03. மாணவர்களுக்கு குறிப்பேடுகள், எழுதுப்பொருட்கள் மற்றும் இனிப்புகள் வழங்கிய அத்தியாயம் அறக்கட்டளைக்கு பள்ளியின் சார்பாக மனம் நிறைந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். 04. மாணவர்களுக்கு மரக்கன்றுகள், எழுதுப் பொருட்கள் மற்றும் இனிப்புகள் வழங்கியும் காலை இணை உணவு திட்டம்( திங்கள் மற்றும் புதன்) ரூ 1000 வழங்கிய தகட்டூர் இராமகோவிந்தன்காடு R.V. மோகன், R.V. குணா சகோதரர்களுக்கு பள்ளியின் சார்பாக மனம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 05. மாணவர்களுக்கு இணையவழியில் கல்வி கற்க SMART CLASS அமைக்க ரூ .10000 வழங்கிய தகட்டூர் இராமகோவிந்தன்காடு இரா. இளவரசன் குடும்பத்தாருக்கு பள்ளியின் சார்பாக மனம் நிறைந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். 06. மாணவர்களுக்கு வாழ்த்துகள் கூறி புத்தகம், எழுதுப்பொருட்கள் மற்றும் இனிப்புகள் வழங்கிய மருதூர் தெற்கு கா. சுந்தரவடிவேல் தலைமை ஆசிரியர் (ஓய்வு) அவர்களுக்கு பள்ளியின் சார்பாக மனம் நிறைந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். 07. குழந்தைகள் தினவிழாவினை முன்னிட்டு திரு.Ravi Chokkalingam ஐயா அவர்கள்..அனுப்பிய வாழ்த்து அட்டைகள் குழந்தைகளின் புகைப்படங்களோடு வழங்கப்பட்டது. மேலும் காலை இணை உணவு திட்டம் (செவ்வாய் மற்றும் வியாழன்) 01.09.2019 முதல் மாதமாதம் ரூ1000 வழங்கிவரும் ஐயா அவர்களுக்கு பள்ளியின் சார்பாக மனம் நிறைந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இன்று சிறுதானிய கஞ்சி பள்ளி குழந்தைகள் தின விழாவில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் வழங்கப்பட்டது ஐயா . 08. வாய்மேடு சித்தா மருத்துவர் திருமதி கவிதா அவர்கள் மாணவர்களுக்கு டெங்கு பற்றிய விழிப்புணர்வும் நிலவேம்பு கஷாயமும் கொடுக்கப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு குழந்தைகள் தின வாழ்த்துகள் கூறி வண்ண பென்சில்கள் வழங்கிய சித்தா மருத்துவர் திருமதி கவிதா அவர்களுக்கு பள்ளியின் சார்பாக மனம் நிறைந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். 09. அனைவருக்கும் அறுசுவை உணவு தயாரித்துக் கொடுத்த விழாவை சிறப்படைய செய்து எம்பள்ளிக்கு பெருமைச்சேர்த்த சத்துணவு அமைப்பாளர் சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு நன்றி! நன்றி !! நன்றி!!!
Subscribe to:
Post Comments (Atom)
கனவு ஆசிரியர் விருது நான் அனுப்பிய காணொளி
எங்கள் பள்ளியின் இடைநிலையாசிரியர் திரு.க.சுப்பிரமணியன் அவர்களுக்கு தமிழக அரசுமாநில நல்லாசிரியர் விருது(2023)வழங்கியது. விருபெற்ற ஆசிரியருக்கு பள்ளியின் சார்பாக நடந்த பாராட்டுவிழா காணொளி.
https://youtu.be/N29Dcs9QAds?si=_w3aHKF_B7rMznys
No comments:
Post a Comment