Tuesday, 2 November 2021

01.11.2021 பள்ளி திறப்புவிழா நிகழ்வுகள்.

           01.11.2021திங்கட்கிழமைஎம்பள்ளியில்பயிலும் (65 மாணவர்கள்மாணவர்களுக்கு பள்ளிக்கு அருகில் உள்ள ஆகாச மாரியம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்துமாணவர்களுக்கு பரிவட்டம் கட்டிமேளதாளம் முழங்க ஊர்வலமாக பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் உறுப்பினர்கள்பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள்சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையலர்முன்னாள் மாணவர்கள்என்னுடன் 18 ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர் திருகாளிமுத்து ஆசிரியர் (திருவாரூர்), ஊர் பொதுமக்கள் முன்னிலையில் பள்ளிக்கு அழைத்து வந்த நிகழ்வுகள்.. மேலும் இந்நிகழ்வு சிறக்க அனைவருக்கும் (சுமார் 300 நபர்களுக்குஉணவு வழங்கிய திருஅன்பழகன் அவர்கள் குடும்பத்திற்கும்மாணவர்களுக்கு மாஸ்க் மற்றும் மலர்மாலைகள் செலவுகளை ஏற்றுக்கொண்ட பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் திருது.இரவீந்திரன் அவர்கள் குடும்பத்திற்கும்மேளம் நாதஸ்வரம் வாசிக்கும் செலவை ஏற்றுக்கொண்ட திரு.சீனுவாசன் அவர்கள் மற்றும் திரு.இளங்கோவன் அவர்கள் குடும்பத்திற்கும்மாணவர்களுக்கு டைரி வழங்கிய திரு.இராமச்சந்திரன் அவர்கள் குடும்பத்திற்கும்இப்பள்ளியின் முதல் புரவலராக ரூ.5000 வழங்கியிருந்த நிலையில் இன்று புரவலர் நிதியாக மேலும் ரூ20,000 காசோலை வழங்கியும் அனைத்து மாணவர்களுக்கும் டை மற்றும் பெல்ட் வழங்கிய திரு.இராகிருஷ்ணமூர்த்தி தலைமையாசிரியர் அவர்கள் குடும்பத்திற்கும்பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் வசூல் செய்து ரூ.16500 செலவில் EPSON M205 PRINTER வழங்கிய ஊர்மக்கள் அனைவருக்கும்அனைத்து மாணவர்களுக்கும் நோட்டு பென்சில் இரப்பர் ஸ்கேல் பேனா வழங்கிய அத்தியாயம் அறக்கட்டளைக்கும்மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்புப்பொருட்கள்மாஸ்க் மற்றும் பிஸ்கட்சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில் வழங்கிய திருமதிவசந்தா சித்திரவேல் ஆசிரியர் குடும்பத்திற்கும்இந்நிகழ்வுகளை எந்த பிரதிபலன்பாராமல் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துக் கொடுத்த மருதூர் தெற்கு கடைத்தெருவில் அமைந்துள்ள நிலா ஸ்டுடியோ உரிமையாளர் திரு.கலிதீர்த்தான் அவர்கள் குடும்பத்திற்கும்இந்நிகழ்வுகளில் பங்குபெற்ற அனைவரும் அமர்வதற்கு நாற்காளி மற்றும் ஜமுக்காளம் வழங்கிய எம்பள்ளியின் சத்துணவு அமைப்பாளர் திருஇராமமூர்த்தி அவர்கள் குடும்பத்திற்கும் மாணவர்கள் அனைவருக்கும் தீபாவளி இனிப்பு பாக்ஸ் வழங்கி சிறப்பித்த தாணிக்கோட்டகம் நண்பன் இனிப்பகத்தின் உரிமையாளர் குடும்பத்திற்கும் எங்கள் பள்ளியின் சார்பாக மனம் நிறைந்த வாழ்த்துக்களையும்நன்றியையும் மனமகிழ்வோடு தெரிவித்

துக் கொள்கிறோம்மேலும் இப்பள்ளியில் 65 மாணவர்களுடன் ஓர் ஆசிரியராக நான்மட்டும் பணிபுரியும் நிலையில் வந்திருந்த ஒவ்வொருவரும் தங்கள் வீட்டு விழாவாக எண்ணி செயல்பட்டதால் இவ்விழா சிறப்புற்றதுஅனைவருக்கும் மீண்டும் ஒருமுறை அல்ல பலமுறை எனது நெஞ்சம் நிறைந்த நன்றியை சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும்.. நன்றிநன்றி!! நன்றி!!!நன்றி!!!











































































































































No comments:

Post a Comment